Pages

8 க்குள் ஒரு யோகா !!!



"எட்டு" போடுகிறவனுக்கு "நோய்"
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.

மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம்
அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு
வருகிறது "நோய்".

நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல்,
அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை
தேடிக் கொள்ளவே விரும்பும்.

சித்தர் வழி என்பது அனைத்துக்கும்
தெளிவான விடைகளை தருகிறது.

சித்தர்கள் :
"எட்டுப் போடு! எல்லாம் பறந்தோடும்!"
என்கிறார்கள்.

நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்
அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,
மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம்.
எத்தனைதான்
மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில்
கட்டுப்பாடு இல்லாமல் போவதால்)
மறுபடியும் இவை தாக்கும்.

இந்த நோய்களை, கொல்லாமல் கொல்லும்
நோய்கள் தரவரிசையில் வைத்துள்ளனர்
சித்தர்கள்.

இதிலிருந்து விடுபட்டு, நாம்
மனிதர்கள், நலமாக வாழ வேண்டும்
என்பதற்காக இந்த முறையை வகுத்துக்
கொடுத்துள்ளனர்.

காலை நேரத்திலோ, அல்லது நேரம்
கிடைக்கும் பொழுதோ, ஒரு
அறையிலோ அல்லது
வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி
நீளம் வேண்டும்) எட்டு போடுகிற
வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள்
நடை பயிற்சி செய்ய வேண்டும்.
முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக
நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள்
வடக்கிலிருந்து தெற்காக நடக்க
வேண்டும். இதை ஒரு நாளைக்கு
இருமுறை செய்ய வேண்டும்.

காலையும், மாலையும் வேளைகள்
மிக வசதியாக இருக்கும்.

இதை செய்வதால் என்ன நடக்கும்!
***********************************
1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.
2. இந்த பயிற்சியை இருவேளை
செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள்
சிவந்திருப்பதை காணலாம். அதாவது
ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
அர்த்தம்.
3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும்
குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை).
4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.
5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை
கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.
7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள்
சரியாக செயல்படும்.
8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில்
வரும்.
10. பாத வலி, மூட்டுவலி மறையும்.
11. சுவாசம் சீராகும் அதனால் உள்
உருப்புக்கள் பலம் பெரும்.

சரி! இதெப்படி நடக்கிறது என்று
உங்களுக்குள் கேள்வி ஏழும்.
"8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது
நீங்களே உணர்வீர்கள்,
அந்த வடிவம்
"முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது
ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது.

இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்த
சித்தர்கள், இதையே "வாசி
யோகத்தில்" (மூச்சு பயிற்சியில்)
உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி
எட்டு போடுவார்கள் என்பது தெரியுமோ?
விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து
பலனடையுங்கள்!

மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும் !!
உள்ளங்கால் முதல் உச்சி வரை இந்த எண்ணிக்கை ஏற்றத்தில் இருக்கும் ,உடல் நோயும் ஆரம்ப நிலை கீழிருந்து மேல் முகமாகவே அதிகப்படியாகும் , நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்யலாம் , உங்கள் வீட்டிற்குள் உள்ளோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் கோடு இட்டு அந்த செவ்வக இடத்திற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள் !! இது தெற்கு வடக்காக நீலப் பகுதி இருக்கணும் .

காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த 8 வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள் , ஆண்கள் வலது கை பக்கம்-- பெண்கள் இடது கை பக்கம் ஆரம்பிக்கணும் , ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 21 நிமிடம் நடக்கணும் , பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று இதேபோல் 21 நிமிடம் கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யணும் , மொத்தம் 42 நிமிடம் !!

1வது 21 நாளில் ---- சர்க்கரைநோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல் , குதிவாதம் , வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும் !!!

2 வது 21 நாளில் ---- மூட்டு வலி , ஒட்டுக்கால் , பிரச்னை குறையும் ,!!!!

3 வது 21 நாளில் ---- தொடை பகுதி பலம் பெரும் ,!!!!

4 வது 21 நாளில் ---- ஆண்மை குறைபாடு , விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு , விந்து நாத அணு குறை பாடு , கல்லீரல் மண்ணீரல் குறைபாடு , கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை , மாதநாள் குறைபாடு ,ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் .!!!

5 வது 21 நாளில் ---- வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும் !!!!,

6 வது 21 நாளில் --- இரத்த அழுத்தம் , இதய நோய் , ஆஷ்துமா , காசம் ,நீர் உடம்பு , உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும் !!!!

7 வது 21 நாளில் --- தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு , முதுகில் வாய் பிடிப்பு வராது ,

8 வது 21 நாளில் --- அன்னாக்கு பகுதி விழிப்படையும் , வாய் கண் காது மூக்கு கருவிகள் நோய் தன்மை தாக்காது , 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும் , மூளைப் பகுதி விழிப்படையும் , மூளைப் பகுதி நோய் தீரும் , தியானங்கள் கை கூடும் , இதை செய்ய வயது வரம்பு இல்லை , இப்பயிற்சி நீங்கள் வாசி யோகத்திற்கு இணையானது ,அதை செய்த செய்த தவப்பயனை பெறுவீர்கள் !!

இந்த 8 நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர் , மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிர்ப்பான் .உங்கள் உடலில் 8 குடில்களில் குடியிருக்கும் ஈசன் அருள் உங்களுக்கு பிரகாசம் ஆகும் , மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் , வாய் வழியாக சுவாசம் கூடாது !!!! ஓம் நமசிவாய!!!

கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்:


பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்! இயற்கை மருத்துவம் :-

1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த ""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் ""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""

எளிய இயற்கை வைத்தியம்


1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டா

3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

நோய்க்குக் காரணம் கிருமிகளல்ல...!

நீங்கள் உண்மையில் புத்திசாலியா அல்லது அவ்வாறு நினைத்து செயல்படும் முட்டாளா..! என பொறுமையாக படித்த பின் முடிவு செய்யவும்..

அறிவியல், நவீனம், புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் என புதிய புதிய உத்திகள் மூலம் நம் மூளை மழுங்க அடிக்கப்பட்டு மிக பெரிய மருத்துவ வியாபார சந்தையின் பலி ஆடுகள் என உணர பெற்றால் நீங்கள் சுய நினைவுடன் உள்ளீர்கள்..

இல்லை தினம், தினம் வரும் மருத்துவ ஆராய்ச்சி என வாய் பிளந்து, அவர்களின் மருத்துவ வியாபார பொய்களை நம்பும் முட்டாளர் கூட்டத்தின் நிரந்தர உறுப்பினரா என நீங்கள் முடிவு செய்யுங்கள்.

நோய்க்குக் காரணம் கிருமிகளல்ல...!

இது மருத்துவத்தின் ஒரு வியாபார தந்திரம் மட்டுமே...?

மனிதனை இயற்கையின் ஓர் ஒப்பற்ற படைப்பு எனலாம். மனித உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் தன்மையும், நோய்களைத் தானே குணமாக்கிக் கொள்ளும் சிறப்பும் கொண்டது. நம் உடலில் உள்ள ஓர் அற்புதமான ஜீவசக்தி எல்லாச் செயல்பாடுகளையும் இம்மி தவறாத கணிப்புடன் இயங்கச் செய்து உடலை எப்போதும் சமநிலையில் வைத்திருக்கிறது. இந்த ஜீவசக்தி நம் உடலின் சிறந்த ஒரு பாதுகாப்பு அரணாகவும், நோயை எதிர்த்துப் போரிடும் பாதுகாவலனாகவும் திகழ்கிறது. இதற்குச் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

நமது கண்ணில் தூசி விழுந்து விடுகிறது. உடனே கண்ணில் நீர் சுரக்க ஆரம்பித்து அந்த தூசியை வெளியேற்றி விடுகிறது.

அளவுக்கு அதிகமாகவோ, உடலுக்குத் தேவையற்ற ஒன்றையோ விழுங்கி விடுகிறோம். உடலின் பாதுகாவலனான இந்த ஜீவசக்தி உடனே செயல்பட்டு குமட்டலையும், வாந்தியையும் உண்டாக்கி, தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுப் பொருட்களை வெளியேற்றி விடுகிறது.

தவறான உணவு முறைகளாலும், பழக்க வழக்கங்களினாலும் இந்த ஜீவசக்தி செயலிழந்து போகும் தன்மையுடையது. உடலின் ஒரே பாதுகாப்பு அரண் செயலிழந்து விடுவதால் பல நோய்கள் உடலில் குடிபுக ஆரம்பிக்கின்றன. ஆகவே இந்த ஜீவசக்தியின் வலு விழந்த தன்மையே நோயாகிறது.

இதற்கு மூலகாரணம் உடலில் இருந்து வெளியேறாது தேங்கிக்கிடக்கும் கழிவுப் பொருட்களும் அதனால் உருவாகிய நச்சுப் பொருட்களுமாகும்.
.

இந்தத் தேவையற்ற கழிவுகளின் தன்மையைப் பொறுத்தும், அவை தேங்கி நிற்கும் உறுப்பைப் பொறுத்தும் நோயின் தன்மை மாறுகிறது.

# நச்சுப் பொருட்கள் முழங்கால் கணுக்கால் போன்ற இடங்களில் தேங்கினால் அது கீல்வாதம் எனப்படுகிறது.

# அடிவயிற்றுப் பகுதியில் கழிவு நீர் அதிகமாகச் சேருமாயின்அது மகோதரம் என்னும் பெருவயிறு நோயாகிறது.

# நுரையீரலில் சளி மற்றும் நீர் அதிகமானால், அது இருமலாகவோ, இளைப்பு நோயாகவோ உருவாகிறது.

இவ்வாறு உடலின் பல பாகங்களில் தேங்கிக்கிடக்கும் கழிவு மற்றும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி விட்டால், ஜீவசக்தி வலுப் பெற்று உடல் நலம் பெறுகிறது.
.

நோய்க்குக் காரணம் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கழிவுகளும் நச்சுப் பொருளுமே காரணமென்றால், நுண்கிருமிகளால் தான் நோய்கள் தோன்றுகின்றன என்றும் அவற்றை அழித்தால்தான் நோய்கள் குணமாகும் என்று அறிவியலாளர் கூறுகின்றனரே..? இது எவ்வாறு சாத்தியமாகும்?

இதுவொரு நியாயமான சந்தேகம்.. எத்தனையோ வகையான நுண்கிருமிகள் (வைரஸ்) நம் உடலுக்கு உள்ளும் வெளியிலும் காற்றிலும் நீரிலும், ஏன் இந்தப் பூமி எங்கும் நிறைந்திருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கிருமிகள்தான். காற்று மண்டலம் முழுவதும் நுண்கிருமிகள்தான். இது முற்றிலும் உண்மைதான்.

ஆனால் இவைகள் தான் நோய்களுக்குக் காரணம் என்று சொல்வதுதான் தவறு. அது எப்படி என்று பார்ப்போம்.

நாம் ஒரு நாளைக்கு 21,000 தடவைகள் நுண்கிருமிகள் உள்ள காற்றைத்தான் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். அப்படியானால் நாம் எல்லோரும் அல்லவா நோய்வாய்ப்பட வேண்டும்? இல்லையே. அது ஏன்? ஏனெனில் நுண்கிருமிகள் நோய்களை உண்டாக்கும் காரணிகள் அல்ல. அதுமட்டுமல்ல; பல மருத்துவ நிபுணர்கள் தங்களின் ஆய்வின் மூலம் நோய்களுக்கு மூலகாரணம் நுண்கிருமிகள் என்பது தவறு என்று நிரூபித்தும் உள்ளனர்.

# டாக்டர். வாட்கின்ஸ் என்பவர் இளைப்பு நோய் (டி.பி.) பற்றி பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து இரத்தத்தின் மூலம் நோய் அறிதல் என்ற ஓர் ஆய்வு நூலை வெளியிட்டார். அதில் நோய் தோன்றுவதற்கு முன் நுண்கிருமிகள் காணப்படும் என்ற கூற்றுக்கு ஆதாரமே இல்லை என்று அடித்துக் கூறுகிறார்.

# ஜான்ஸம் ரேசர் என்பவர் கனடாவில் புகழ்பெற்ற மருத்துவர். இவர் நுண்கிருமிகள் நோய்களுக்குக் காரணமா? என்ற ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதில் நோய் தோன்றிய பின்புதான் கிருமிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன என்பதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.
.

1941ல் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளரான டாக்டர் ஹண்டர் என்பவரும் மற்றும் சில நிபுணர்களும் சேர்ந்து நுண்கிருமிகள் நோய்க்குக் காரணம் அல்ல என்பதை நேரடியான சோதனைகள் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர். டிப்தீரியா என்பது தொண்டையைப் பாதித்து, அதன்பின் உயிரையே குடிக்கும் ஒரு கொடிய நோய். இந்த நோயில் காணப்படும் கிருமிகளை ஹிண்டர் தனிமைப்படுத்தி வளர்த்தார். இலட்சக்கணக்கான இந்தக் கிருமி நீர், பால், உணவு ஆகியவற்றில் கலந்து ஆரோக்கியமான பலருக்கு உண்ணக் கொடுத்து வந்தார். ஆனால் ஒருவர்கூட டிப்தீரியா நோயினால் பாதிக்கப்படவில்லை.

அவர் செய்த மற்றொரு ஆராய்ச்சி இன்னும் புதுமையானது. இதே கிருமிகளைச் சிலருடைய உள்நாக்கு, தொண்டை மற்றும் மூக்கின் உட்பாகம் ஆகியவற்றில் நேராகவே தடவி விட்டார். இப்போதும் எவரும் நோயால் பாதிக்கப்பட வில்லை. நுண்கிருமிகளே நோய்க்கான காரணமென்றால், இந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட எவராவது பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா?
.

இன்னொரு ஆய்வு, இதனை நடத்தியவர் வியன்னா பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பாடின்காஃபர். இவர் இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார். நுண்கிருமிகள் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு கண்ணாடிக் குவளையில் நீரை ஊற்றினார், பரிசோதனைச் சாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட இலட்சக்கணக்கான காலராக் கிருமிகளை அந்த நீரில் கலந்தார். மாணவர்கள் எல்லோரும் திகைத்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நீர் முழுவதையும் மடக்மடக்கென குடித்து விட்டார். பல நாட்கள் கடந்த நிலையிலும் அவர் காலராவால் பாதிக்கப்படவில்லை.
.

இந்தச் சோதனைகள் மூலம் நமக்கு விளங்குவது என்ன?

*நுண்கிருமிகள் ஒரு போதும் நோய்கள் உண்டாகக் காரணமாக அமைவதில்லை. ஓர் ஆரோக்கியமான உடலினுள் அவை வாழ முடிவதில்லை. ஆனால், கழிவு மற்றும் நச்சுப் பொருட்கள் நிறைந்த ஜீவசக்தி வலுவிழந்துள்ள - உடம்பினுள் கிருமிகள் பல்கிப் பெருகுகின்றன.*

_ஆகவே, நோய் உண்டாக அடிப்படையான காரணம் உடலினுள் சேர்ந்துள்ள கழிவு மற்றும் நச்சுப் பொருட்களின் தேக்கமே. இதனால் உண்டான விளைவுதான் நுண்கிருமிகள். எனவே, ஒரு நோயைக் குணமாக்க வேண்டுமென்றால், உடம்பில் தேங்கியுள்ள தேவையற்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றி ஜீவசக்தியை வலுவுள்ளதாக்கவேண்டும்._

இதை விட்டுவிட்டு அந்தக் கிருமிகளைக் கொல்லக்கூடிய மருந்துகளை விழுங்குவதால் உடலில் மேலும் ரசாய கழிவுகள் தேங்குகின்றன. இதனால் மற்றும் ஒரு புதிய முறையில் உடல் [உயிர்-ஜீவசக்தி] அந்த கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கிறது. இப்போது உடலில் முன்பைவிட சற்று கூடுதலான தொந்தரவு தோன்றுகிறது. இப்போதும் பல டெஸ்ட்கள் எடுத்து பார்த்துவிட்டு இதற்கும் ஒரு கிருமிதான் காரணம் ஆனால் அதற்கு வேறு ஒரு புதிய பெயர் என்று மருத்துவம் இன்று பல புதிய நோய்களை உருவாக்கி வருவது வேதனையான விஷயம்.

_“ஒரு நோயை குணபடுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் வைத்தியத்தின் மூலம் மேலும் மேலும் மோசமாகிவிடாதீர்கள்”_ என்பது ஆங்கில மருத்துவத்தின் தந்தை டாக்டர்.ஹிப்போக்ரேட்டிஸ் மருத்துவர்களுக்கு கூறும் அறிவுரைகளில் மிகவும் முக்கியமானது ஆகும்.

ஆனால் ஆங்கில மருத்துவமோ தங்களை அறியாமலேயே பெரும் தவறிழைத்து கொண்டிருகிறது.

நாம் நம் உடலின் அடிப்படையை புரிந்து கொள்ளாதவரை, இது போன்ற ஏமாற்று வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
.

இதற்கு எடுத்துகாட்டு, இன்று டிவி-ஐ போட்டாலே சாதாரண பேஸ்ட் முதல்கொண்டு சீப்பு, சோப்பு, பவுடர், ஷாம்பூ, மற்றும் அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களை விற்க கூட இந்த கிருமிகள் மிகவும் பேருதவியாக உள்ளது. இவர்களுக்கு முதலீடே பணம் அல்ல கிருமிகள் தான். இன்று சாதாரண பொருட்களை விற்க கூட மருத்துவரின் வெள்ளை கோட்டு இல்லாமல் ஒரு விளம்பரமும் வருவதில்லை.

என்று நாம் கிருமிகள் என்பது வெறும் கட்டுக்கதை என்பதனை புரிந்துகொள்கின்றோமோ, அன்று தான் நமது உடல் தன்னை தானே குணப்படுத்தும் என்பதில் நம்பிக்கை வரும். அப்போது தான் இது போன்ற ஏமாற்று வேலைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். ஆனால் அன்று நம்மால் சும்மா இருக்க முடியாது. மற்றவர்களுக்கும் இதனை புரியவைக்க முயற்சிப்போம். அதை தான் நான் செய்து கொண்டுள்ளேன். புரிந்தால் நீங்களும் நிச்சயம் இதைதான் செய்வீர்கள்.

இவை மற்றும் அல்ல, சில வருடங்கள் முன்பு வரை மருத்துவர்கள் உபயோகித்த Syringe மற்றும் ஊசிகள் சுடும் நீரில் போட்டு எடுத்து மீண்டும் உபயோகிக்கும் முறையை கடைபிடித்தார்கள் அப்போது எந்த நோயும் பரவியதாக தெரியவில்லை. இன்று Disposable Syringes தான் பயன்படுத்தபடுகிறது இதனை மாற்ற இவர்கள் கூறியது ஊசிகள் மூலம் நோய் பரவும் என்று.. ஆனால் இன்றோ அப்படி நோய் பரவாது என்றும் இதே மருத்துவம்தான் கூறுகிறது. இதற்கு இடையில் ஒரு வியாபாரம் நடந்து உள்ளது. பலருக்கும் ஒரே Syringe மற்றும் ஊசிகள் பயன்படுத்துவதால் லாபம் வருமா அல்லது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பயன்படுத்தினால் லாபம் வருமா...? இந்த வியாபாரத்தில் கூட்டு சேர்ந்த வெளிநாட்டு மருந்து கம்பெனி Dispovan, இவர்கள்தான் இன்று அதிக அளவில் Disposable Syringes தயாரிக்கும் கம்பெனி. மருத்துவம் எப்படி வியாபாரமாக மாறிவருகிறது பாருங்கள்.
.

இதற்கு மற்றும் ஒரு எடுத்துகாட்டு, சில வருடங்கள் முன்பு வரை ஷேவ் செய்ய உபயோகித்து வந்த Blades இன்று எப்படி மாறி உள்ளது என்று பாருங்கள். நமக்கே தெரியும் சில வருடங்கள் முன்பு வரை ஒரு கத்தி மட்டுமே இருக்கும், அதனை சிறிய கல்லை கொண்டு தீட்டி அதில்தான் அனைவருக்கும் ஷேவ் செய்வார்கள். அப்போது நோய்கள் எவ்வளவு இருந்தது என்றும் இன்றோ அவை எப்படி பெருத்து உள்ளது என்றும் உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனால் இன்றோ நாம் உபயோகிக்கும் Single Use Razors தான் தங்கள் ஆதிக்கத்தை கொண்டுள்ளது. இது வர காரணமாக சொல்லப்பட்டதும் இதே கிருமிகள் தான். ஆனால் இன்று மருத்துவம் சொல்கிறது Blade கள் மூலம் எல்லாம் கிருமிகள் பரவாது என்று. ஆனால் இன்னும் நம் பயம் மாறவில்லை. இடையில் லாபம் அடைந்ததும் ஒரு வெளிநாட்டு கம்பெனி தான் அது இந்தியாவில் இருந்த அனைத்து கம்பெனிகளையும் ஒழித்துவிட்டு இன்று முதல் இடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் Gillette.

இவற்றை எல்லாம் பார்த்தால் எந்த ஒரு வெளிநாட்டு பொருளையும் இந்தியாவில் விற்க மருத்துவத்துறை மிக பெரிய பக்கபலமாக இருப்பது கண்கூடாக நிரூபிக்கபடுகிறது.
இது போல் மக்கள் கண்களில் இருந்து மறைக்கப்படும் விஷயங்கள் பல உள்ளன அவற்றை எல்லாம் மக்கள் கண் முன் வெளிச்சம் போட்டு காட்டுவதே என் கடமை.

.

*உணவே மருந்து; வாழ்க்கைமுறையே தீர்வு!*

ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள்.

_நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது._

*சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.*

உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும். ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்? இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.

அதே நேரத்தில்
internet browser மூலம் கிடைக்கும் குப்பை கருத்துகளுக்கு நான் எப்படி விடை கூற முடியும்.

நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.

நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் உரிமை.

என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள்.. ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவது தான் நோக்கம்..


தயவுசெய்து பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும்
எம்மை மருத்துவ அலோசனைக்கு அணுகலாம்.

மற்றவர்கள் Side please.
சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மெய்யை மெய் என ஏற்று கொள்ளாத மூடர் கூட்டம் பற்றி கவலைப்பட நேரம் இல்லை.

உண்மையை செவிட்டில் அறைந்து கூறுவோம்.

~மணி கண்ட பரதேசி
சித்தர்கள் பரிபாஷை ஆராய்சியளர்
.

புதுச்சேரியில் இலவச கண்பார்வை குறைபாடு போக்கும் பயிற்சி

கண்ணாடி அணியாமல் எளிய கண் விழிப்பயிற்சி மூலம் கண்பார்வை குறைபாட்டை போக்கும் பயிற்சியை புதுச்சேரியில் இயங்கிவரும் அரவிந்தர் ஆசிரம பயிற்சி மையம் மக்களுக்கு இலவசமாக கற்றுத்தருகிறது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அரவிந்தர் ஆசிரம கட்டுபாட்டில், இந்த கண்பார்வை குறைபாட்டை சரி செய்யும் பயிற்சிப்பள்ளி செயல்பட்டுவருகிறது. 7 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்படும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்சிமிட்டுதல் போன்ற பார்வை குறைபாடுகளை மருந்து மாத்திரைகள் இன்றி எளிய கண்விழிப்பயிற்சி மூலம் எந்தவித கட்டணமின்றி இலவசமாக சரிசெய்கிறோம் என்கின்றனர் இந்த பயிற்சி பள்ளி நிர்வாகிகள்.

இந்த பயிற்சி மையத்திற்கு வரும் பார்வை திறன் குறைவாக உள்ளவர்களுக்கு இங்கு 6 நாட்கள் தொடர்ச்சியாக காலை மற்றும் மாலை, 2 மணி நேரம் முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது, சூரிய ஒளியில் கண் விழிகளை மட்டும் பக்க வாட்டில் இடது புறத்தில் இருந்து வலது புறம் நகர்த்துதல் பின்பு வலது புறத்தில் இருந்து இடது புறம் நகர்த்துதல் என பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

ஆறு நாட்கள் பயிற்சி முடித்த பின் இறுதி நாளில் பார்வை திறன் பரிசோதிக்கப்படுகிறது, அந்த பரிசோதனை முடிவில் தாங்கள் இந்த மையத்திற்கு வருவதற்கு முன்பும் இருந்த பார்வை திறனைவிட கூடுதலாக பார்வைத்திறன் பெற்றதாகக் கூறுகின்றனர் இங்கு வந்து பயிற்சி பெற்றவர்கள். பெரும்பாலும் வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அதிகமானோர் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.

நாட்டில் ஒரு சில இடங்களில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டாலும் இந்த மையத்தில் எந்தவித கட்டணமுமின்றி இலவசமாகவே பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு  பயிற்சி பெற விரும்புவோர் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக தங்கியிருந்து பயிற்சி எடுக்க வேண்டும். ஆசிரமத்தில் நபர் ஒருவருக்கு தலா 100 ருபாய் செலுத்தினால் தங்கும் விடுதி அளிக்கபடுகிறது. auroeyesight@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.

வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்

  1. சத்துக்கள்
  2. சர்க்கரை நோய்
  3. எடை குறைவு
  4. இதய ஆரோக்கியம்
  5. ஆன்டி-வைரஸ்
  6. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்
  7. செரிமானம்
  8. மாதவிடாய் பிரச்சனைகள்
  9. பிரசவம்
  10. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
  11. பாலியல் ஆரோக்கியம்
சமையலில் சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் ஆயுர்வேதத்தில் பாரம்பரிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
அத்தகைய வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?
முக்கியமாக இது சர்க்கரை நோய், உடல் பருமன், இதய பிரச்சனைகள், மாதவிடாய் பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து தீர்வு கிடைக்க உதவும்.
இங்கு வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து சாப்பிடுங்கள்.

சத்துக்கள்

வெந்தயத்தை எந்த வடிவத்தில் எடுத்தாலும், அதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன்கள், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அல்கலாய்டுகள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும் இதில் டையோஸ்ஜெனின் என்னும் சேர்மம் உள்ளது

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்கள், வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால், உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கலாம். மேலும் இதுக் குறித்து டைப்-2 நீரிழிவு நோயாளிக்கு 24 வாரங்கள் தினமும் முளைக்கட்டிய வெந்தயம் கொடுக்கப்பட்டு வந்ததில், அந்நோயாளியின் இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பது தெரிய வந்தது.

எடை குறைவு

தினமும் முளைக்கட்டிய வெந்தயம் உட்கொண்டு வந்தால், உடல் எடையை குறைக்கலாம். இதற்கு வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன் என்னும் உட்பொருள் தான் காரணம். இது தான் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கச் செய்கிறது. மேலும் வெந்தயத்தில் 75% கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உள்ளது. இது வயிற்றை வேகமாக நிரப்பி, எடையைக் குறைக்க நினைப்போருக்கு நல்ல தீர்வைத் தருகிறது.

இதய ஆரோக்கியம்

முளைக்கட்டிய வெந்தயத்தை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய பிரச்சனைகள் வரும் அபாயமும் குறையும்.

ஆன்டி-வைரஸ்

முளைக்கட்டிய வெந்தயத்தில் ஆன்டி-வைரல் பண்புகள் அதிகம் உள்ளது. இதனால் இதனை தினமும் சிறிது உட்கொண்டு வருபவர்களுக்கு, சளி, இருமல், தொண்டை பிரச்சனைகள் போன்றவை வராமல் இருக்கும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

முளைக்கட்டிய வெந்தயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது.இதனால் ப்ரீ-ராடிக்கல்களால் உடலில் உள்ள செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, குறிப்பிட்ட புற்றுநோய்கள் வருவது தடுக்கப்படும்.

செரிமானம்

நம் முன்னோர்கள், தங்களுக்கு ஏதேனும் செரிமான பிரச்சனைகளான வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு போன்றவற்றிற்கு வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து சாப்பிடுவார்கள்.

மாதவிடாய் பிரச்சனைகள்

40 வயதை எட்டிய பெண்களுக்கு இறுதி மாதவிடாய் நெருங்கிக் கொண்டிருக்கும். அந்நேரத்தில் அவர்கள் மிகுந்த அசௌகரியத்தை உணர்வதோடு, மனநிலையில் ஏற்ற இறக்கம், ஒருவித வெப்ப உணர்வு போன்றவற்றை சந்திப்பார்கள். ஆனால் முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் பெண்கள் உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவதைத் தடுக்கலாம்

பிரசவம்

பெண்கள் வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், பிரசவம் எளிமையாக நடைபெறும். ஆனால் கர்ப்ப காலத்தில் இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் பிரச்சனையைத் தான் சந்திக்க வேண்டி வரும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்

வெந்தயத்தில் கேலக்டோகோக் என்னும் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் உட்பொருள் உள்ளது. எனவே பிரசவம் முடிந்த பெண்கள் முளைக்கட்டிய வெந்தயத்தை உட்கொண்டால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

பாலியல் ஆரோக்கியம்

வெந்தயத்தை ஒருவர் எந்த வடிவில் உட்கொண்டு வந்தாலும், அவரது பாலுணர்ச்சி அதிகரிக்கும் என ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆய்வுகளும் இதனை நிரூபிக்கின்றன.
ஆதாரம் - மஹா,  ஒன்இந்திய நாளிதழ்

ஆரோக்கியமான கூந்தலுக்கு நெல்லிக்காய்

  1. கூந்தல்
  2. அடர்த்தியில்லாத கூந்தல்
  3. அரிப்பு

கூந்தல்

சாதாரணமாகவே நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் அதனை சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் பெரிதும் உதவியாக உள்ளது. பெரும்பாலும் ஆயுர்வேதத்தில் தான் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துவார்கள்.
ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இவை உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வைக் கொடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அத்தகைய நெல்லிக்காயில் உடல் நன்மைகள் மட்டுமின்றி, அழகு நன்மைகளும் அதிகம் நிறைந்துள்ளது.
தற்போது நிறைய மக்கள் ஆம்லா/நெல்லிக்காய் எண்ணெய், நெல்லிக்காய் இருக்கும் ஹென்னா போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பது, கூந்தல் உதிர்தலை தடுப்பது, அடர்த்தியான கூந்தலை வளரச் செய்வது என்ற பலனைத் தருகின்றன.
மேலும் நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக இருக்கும். ஏனெனில் இவை உடலில் உள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றிவிடும் என்பதால் தான். அத்தகைய நெல்லிக்காயை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், என்ன பிரச்சனைகள் எல்லாம் சரியாகும் என்று பார்ப்போம்.
கூந்தல் உதிர்தல் தினமும் நெல்லிக்காய் எண்ணெய் கொண்டு, தலைக்கு 45 நிமிடம் மசாஜ் செய்து, பின் தலைக்கு குளித்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.

அடர்த்தியில்லாத கூந்தல்

கூந்தல் அடர்த்தியில்லாமல் இருந்தால், அப்போது கூந்தலை சுருட்டையாக்கி புதிய ஹேர் ஸ்டைல் செய்வதற்கு பதிலாக, நெல்லிக்காய் எண்ணெயை பயன்படுத்தினால், கூந்தல் அடர்த்தியாகும். இல்லையெனில் நெல்லிக்காய் பொடியை, சீகைக்காய் பொடி மற்றும் ஹென்னாவுடன் சேர்த்து கலந்து, தலைக்கு போட்டு குளித்து வந்தால், கூந்தல் அடர்த்தியாகும்.
பொடுகுத் தொல்லை தலையில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகுத் தொல்லை. அத்தகைய பிரச்சனையைப் போக்குவதற்கு நெல்லிக்காய் பயன்படுத்தினால், தலை நன்கு சுத்தமாகவும் பொடுகின்றி இருக்கும்.
ஹேர் கண்டிஷனர் நெல்லிக்காய் ஒரு இயற்கையான ஹேர் கண்டிஷனர். எனவே இதனை தலைக்கு போட்டுக் குளித்தால், தலைக்கு கண்டிஷனர் போட்டது போன்று இருக்கும்.
நரைமுடி மன அழுத்தம், செரிமானப் பிரச்சனை மற்றும் ஆரோக்கியமற்ற டயட் காரணமாக நரைமுடியானது இளமையிலேயே வந்துவிடுகிறது. எனவே இதனை தடுக்க, தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து, நெல்லிக்காய் எண்ணெய் தடவி வந்தால், நரைமுடியைத் தடுக்கலாம்.

அரிப்பு

தலையில் அதிகமான அரிப்பு ஏற்பட்டால், நெல்லிக்காய் பொடியுடன், தயிர் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், தலையில் ஏற்படும் அரிப்புகள் நீங்கும்.
கூந்தல் வளர்ச்சி நெல்லிக்காயை தலைக்கு பயன்படுத்தும் போது, அது மயிர்துளைகளை நன்கு ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.
பொலிவிழந்த முடி போதிய கூந்தல் பராமரிப்பு இல்லாததாலும், அதிக மாசுபாடு காரணமாகவும், கூந்தலானது பொலிவிழந்துவிடுகிறது. எனவே இதனை சரிசெய்யவும், கூந்தலை வலுவாக்கவும், நெல்லிக்காயை பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.
முடியின் நிறம் மாறுவது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் கூந்தல் வறட்சி, நறம் மாறுதல் போன்றவை ஏற்படுகிறது. எனவே அவ்வாறு முடியின் நிறம் இளமையிலேயே மாறாமல் இருக்க, நெல்லிக்காய் எண்ணெயை தினமும் தடவி கூந்தலை பராமரிப்பது அவசியமாகும்.
ஆதாரம்: http://tamil.boldsky.com

முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில குறிப்புகள்


  1. முடியை ட்ரிம் செய்யவும்
  2. ஆயில் மசாஜ்
  3. முட்டை அவசியம்
  4. சீப்புகளை பயன்படுத்தவும்
  5. ஹேர் ட்ரையரை தவிர்க்கவும்
  6. உருளைக்கிழங்கு மசாஜ்
  7. நறுமணமிக்க எண்ணெய்கள்
  8. வெங்காயச் சாறு
  9. பீர் வாஷ்
  10. வினிகர்
  11. கண்டிஷனர் வேண்டாம்
  12. தினமும் தலைக்கு குளிக்குறீங்களா?
  13. முடிக்கும் பாதுகாப்பு தேவை
  14. ஈரமான முடியில் சீப்பு வேண்டாம்
  15. காட்டன் தலையணை உறை வேண்டாம்
  16. மன அழுத்தத்தைத் தவிருங்கள்
  17. சரியாக சாப்பிடவும்
  18. போதிய தூக்கம்

இயற்கை வழி பராமரிப்பு

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, பின் அதனால் பல்வேறு பக்க விளைவுகளை அனுபவித்து திருந்துகின்றனர்.
மேலும் இயற்கை வழி தான் சிறந்தது என்று உணர்ந்து, தற்போது முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமென்று இன்டர்நெட்டில் தேடி அலைகின்றனர்.
குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களானது பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் தான். இதனை சரியாக பின்பற்றி வந்தால், தலை வழுக்கையாவதைத் தடுக்கலாம்.

முடியை ட்ரிம் செய்யவும்

மாதம் ஒருமுறை முடியை ட்ரிம் செய்வதால் முடியின் வலிமையானது அதிகரிக்கும். எப்படியெனில் முடியானது வளரும் போது, முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, முடியின் ஆரோக்கியமானது பாழாகிறது. இதனால் முடியின் வளர்ச்சியானது குறைய ஆரம்பிக்கிறது. ஆகவே மாதம் ஒருமுறை முடியை லேசாக ட்ரிம் செய்ய வேண்டும்.

ஆயில் மசாஜ்

முடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க சிறந்த வழியெனில், அது வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

முட்டை அவசியம்

முட்டையின் வெள்ளைக்கருவிற்கு பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்யும் குணம் உள்ளது. அதுமட்டுமின்றி, முடியை மென்மையாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும். ஆகவே வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.

சீப்புகளை பயன்படுத்தவும்

சீப்புகளைக் கொண்டு தலையை சீவும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும். எனவே தினமும் 3-4 முறை தலைக்கு சீப்பை பயன்படுத்துங்கள். இதனால் மயிர்கால்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

ஹேர் ட்ரையரை தவிர்க்கவும்

தலைக்கு குளித்த பின்னர், முடியை உலர வைக்க பலர் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால், முடியின் ஆரோக்கியமானது பாதிக்கப்படும். அதிலும் இதனை தினமும் பயன்படுத்தினால், விரைவில் வழுக்கைத் தலை ஏற்பட்டுவிடும். ஆகவே எப்போதும் முடியை இயற்கையான வழியில் உலர வையுங்கள்.

உருளைக்கிழங்கு மசாஜ்

முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கிலும் உள்ளது. அதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

நறுமணமிக்க எண்ணெய்கள்

முடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமானால், நறுமணமிக்க எண்ணெய்களான லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை மசாஜ் செய்ய வேண்டும்.

வெங்காயச் சாறு

வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.

பீர் வாஷ்

மாதம் ஒருமுறை ஒரு டம்ளர் பீரைக் கொண்டு, ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து வந்தால், மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

வினிகர்

வினிகர் கூட ஒரு அற்புதமான கூந்தல் பராமரிப்பு பொருள். அதற்கு வினிகரை நீரில் கலந்து, பின் அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப் மற்றும் முடியை அலசினால், முடியானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.

கண்டிஷனர் வேண்டாம்

கண்டிஷனர் முடிக்கு நல்லது தான். இருப்பினும் அந்த கண்டிஷனரானது ஸ்காப்பில் பட்டால், அது முடியின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே கெமிக்கல் கலந்த கண்டிஷனர் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கையான கண்டிஷனர்களான தயிரைப் பயன்படுத்துங்கள். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

தினமும் தலைக்கு குளிக்குறீங்களா?

சிலர் தினமும் தலைக்கு குளிப்பார்கள். இப்படி தினமும் தலைக்கு குளித்தால், தலையில் உள்ள இயற்கை எண்ணெய்களானது வெளியேறிவிடுவதோடு, முடியானது பொலிவை இழந்துவிடும். ஆகவே முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளித்தால் போதும்.

முடிக்கும் பாதுகாப்பு தேவை

முடியின் மீது சூரியக்கதிர்களானது நேரடியாக படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், சூரியக்கதிர்களானது மயிர்கால்களைத் தாக்கி, முடி உதிர்வதை அதிகரிக்கும். எனவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அணிந்தோ அல்லது துப்பட்டா கொண்டு சுற்றிக் கொண்டோ செல்லுங்கள்.

ஈரமான முடியில் சீப்பு வேண்டாம்

முடி ஈரமாக இருக்கும் போதோ, தலைக்கு சீப்பு பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் முடி ஈரமாக இருக்கும் போது வலிமையிழந்து இருக்கும். அப்போது சீப்பு பயன்படுத்தினால், முடியானது வேரோடு வந்துவிடும். ஆகவே முடி உலரும் வரை சீப்பு பயன்படுத்தாதீர்கள்.

காட்டன் தலையணை உறை வேண்டாம்

காட்டன் தலையணை உறையைப் பயன்படுத்தினால், முடி அதிகம் உதிரும். ஆகவே சில்க் தலையணை உறையைப் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

மன அழுத்தத்தைத் தவிருங்கள்

தற்போது மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் அதிகம். அப்படி மன அழுத்தமானது அதிகம் இருந்தால், முடியானது ஆரோக்கியத்தை இழந்து கொட்ட ஆரம்பிக்கும். ஆகவே மன அழுத்தத்தைத் தவிர்க்க உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய ஆரம்பியுங்கள்.

சரியாக சாப்பிடவும்

காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதோடு, தண்ணீரை அதிக அளவில் பருகுங்கள். இதனால் முடியின் வளர்ச்சியும், அடர்த்தியும் அதிகரிக்கும்.

போதிய தூக்கம்

அன்றாடம் 6-7 மணிநேரம் தூக்கமானது அவசியம். அப்படி இல்லாவிட்டால், முடியானது ஆரோக்கியத்தை இழந்துவிடும். எனவே தினமும் போதிய அளவு தூக்கத்தை பின்பற்றி வாருங்கள். முடியின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
ஆதாரம்: http://tamil.boldsky.com

ஜலதோஷம் பிடிக்காத மருதாணி!

"மருதாணி போடுவதால் வெள்ளை முடி நிறமாகும். தொடர்ந்து நரைக்காது. அதோடு, முடி கொட்டுவதும் நின்று போகும். ஆனால், வெறும் மருதாணி, முடியை வறட்சியாக்கிவிடும். மருதாணியுடன் மேலும் சில அயிட்டங்களை சேர்த்தால் கூந்தல் மிருதுவாகும். சளி பிடிக்காது. சைனஸ் பிரச்னை இருப்பவர்களும் பயன்படுத்தலாம்.

சாப்பிடுவோமா....சமைக்காத உணவு...

கடும் கோடையிலும் கணுக்கால் நனைக்கும் தண்ணீர் ஓடும் நதிக் கரையோரம்....வாழை, மா, பப்பாளி என பலவித பழவாசனையோடு அடர்ந்த நிழல் தரும் மரங்கள். மரங்களுக்கு மத்தியில் சிறிய குடில். இதுதான்...திருச்சி மாவட்டத்தில், காவிரி கரையில் அமைந்த 
பெருகமணியில் இருக்கும் இயற்கை வாழ்வியல் பயிற்சி மையம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து, கம்பரசம் பேட்டை, முக்கொம்பு வழியாக, கரூர், ஈரோடு செல்லும் மெயின் ரோட்டில் இருந்து இந்த பாலத்தின் வழியாகத்தான் இயற்கை வாழ்வியல் பயிற்சி மையத்திற்கு செல்ல வேண்டும்.

எண்ணெய் தேய்த்து குளிப்பது எப்படி?

 
 
Photo

முன்னோர்களின் வழிமுறைகளும் பழங்காலத் தொடர்புகளும் தளர்ந்துள்ள இக்காலத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பது எப்படி என்பதை நீங்க தெரிந்து கொள்ள வேண்டும்.

முத்திரைகள்


கோடை வெப்பத்தை சமாளிக்க முத்திரைகள்..!
கோடை காலம் தொடங்கிவிட்டது.
அதிக வெப்பம், தாகம் என்று பிரச்னைகள் தாக்கும். இச்சூழ்நிலையில், நம் உடலைப் பாதுகாத்துக்கொள்ள முத்திரைகள் உதவும்.
கோடை வெயிலை சமாளிக்க உதவும் முக்கிய முத்திரைகள் நான்கை பார்க்கலாம்.

கண் சரி செய்வதற்கான பயிற்சிகள்

  •  நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் புருவங்களை நீங்களே தடவி கொடுங்கள் அல்லது சிறுவர்களிடம் தடவி விடுமாறு சொல்லுங்கள்.

பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கான தெய்வீக மூலிகை



தெய்வீக மூலிகை
                 
 பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கான தெய்வீக மூலிகைகள் கலந்த கலவை இது (கண்ணுக்கு மருந்து)
 தேவைப்படும் பொருட்கள்

  • வேப்பிலை
  • துளசி இலை
  • அருகம்புல்
  • தும்பைப்பூ
  • கரிசலாங்கண்ணி கீரை 
  •  வெந்தயம்

திருநீர் அணிவது எதற்காக என்பது தெரியுமா ?

குளியலைப் போலவே திருநீர் அணிவதும் அன்றாட வாழ்கையின் ஓர் முக்கிய பாகமாய் இருந்தது முற்காலத்தில்.

உடல் முழுதும் திருநீர் பூச வேண்டுமா ?
திருநீர் பூசுவதையே மூட நம்பிக்கையாகக் கருதும் இக்காலத்தில், உடல் முழுதும் திருநீர் பூச வேண்டும் என்று சொன்னால், இறைவனருள் இதனால் கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கை இருந்தாலும் உடலெங்கும் விபூதி அணிவதால் மற்றுமொரு நன்மை உண்டாகும்.

கண்கள் - பராமரிப்பும் அலங்காரமும் - தெரிந்து கொள்வோம்



                அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகத்தின் அழகிற்கு மெருகூட்டுவதும், கவர்ச்சியைக் கொடுப்பதும் கண்களே. கண்களின் பார்வையில் பல அர்த்தங்களும் உண்டு.
             
               மனித உடலில் கவர்ச்சிப் பிரதேசம் கண்கள். உணர்வுகளையும், உண்மைகளையும் வெளிப்படுத்தும் மிகச்சிறந்த உறுப்புகள் அவையே. முகத்தின் மெருகிற்கு முத்திரை பதித்தது போல் இருக்கும் கண்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் ஜொலிக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அதனால் எல்லோரும் கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
  
                   இவ்வளவு முக்கியமான கண்களை அல்லது கண்பார்வையை இழப்பதற்கு பல காரணங்கள் உண்டு. நாம் உண்ணும் உணவு, எமது பழக்க வழக்கங்கள், நாம் வாழும் சூழ்நிலை, நாம் செய்யும் தொழில், தூக்கமின்மை என்பனவற்றுடன் நாம் அவற்றை சரியாக பராமரிக்காது விடுவதுமே முக்கிய காரணிகளாகும்.

                     கண் பார்வைக் குறை ஏற்படாதிருக்க அவற்றிக்கு வேண்டிய போசாக்கான உணவு அவசியம். விற்றமின் “ஏ” யும் “சீ” யும், இரும்புச் சத்தும் முக்கியமாக கண்களிற்கு தேவைப்படுகின்றன. அவை பழங்களிலும், மரக்கறிகளிலும், கீரைகளிலும் போதுமான அளவு கிடைக்கின்றன. 

                      போதை வஸ்து, மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டவர்களாக இருக்கும் போது அவற்றில் உள்ள நஞ்சுப் பொருள்கள் இரத்தத்தில் சேர்ந்து மிகவும் நுண்ணிய அமைப்பைக் கொண்ட கண்களின் பார்வையை பாதிக்கின்றன.. எனவே அவற்றை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.

                    நாம் வாழும் சூழ்நிலை மாசு பட்டதாகவும், தூசு நிறைந்ததாகவும், நச்சுப் புகையுள்ளதாகவும், பசுமையற்றதாகவும் இருக்கும் போது விழித்திருக்கும் கண்கள் அவற்றால் தாக்கமடைந்து பார்வை பாதிப்படைகின்றது.

                 நாம் செய்யும் தொழிலும் எமது கண்பார்வையை கெடுத்து விடுகின்றது. அதிக நேரம் கணினி பாவித்தல், தொழிற்சாலைகளில் தெறித்து வரும் உலோகத் துண்டுகளின் தாக்கங்களும், இரசாயன வாயுக்கள் கலந்த காற்றும் கண்பார்வையை கெடுத்து விடுகின்றன. அச்சந்தற்பங்களில் தவறாது பாதுகாப்பு கவசம் அணிதல் வேண்டும்.

                             இவை மட்டுமல்லாது நாம் அன்றாடம் கண்களை அழகு படுத்த பாவிக்கும் இரசாயன திரவியங்களும் தரக்குறைவாலும், எமது தவறான பாவனையாலும், கண்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தரமானவற்றை முறைப்படி பாவித்தால் கெடுதி குறைவாக இருக்கலாம்.
      
                 நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்கள். கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, அழகையும் கெடுத்து விடுகின்றன.

                 கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மிக மென்மையானது. தவிர சீக்கிரமே வறண்டு போகக் கூடியது.

               கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களைக் கசக்கக் கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக சுலபமான காரணமாகி விடும். சுருக்கம் மிக அதிகமாக இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம் அல்லது பாதாம் எண்ணெய் உபயோகிக்கலாம். மோதிர விரலால் மிகமிக மென்மையாக மசாஜ் செய்து துடைக்கலாம்.

                    தேயிலையைக் கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் ஒத்தடம் கொடுப்பதை தினமும் செய்யலாம்.

கருவளையம்:
               சருமத்தின் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஹைப்போ டெர்மிஸ், கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் மிகக் குறைவு. பரம்பரை வாகு, தூக்கமின்மை, சரிவிகித உணவு உண்ணாதது, கம்பியூட்டர், டி.வி. முன் அதிக நேரம் இருப்பது என கருவளையங்களுக்கான காரணங்கள் பல. இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொண்டால் சரியாக்கலாம்.
கருவளையம் வராமல் தடுக்க, குறைந்தது 8 மணி நேரம் நன்றாக உறங்கவேண்டும். தூங்கும் போது எந்த விதமான மன உளைச்சல்களும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

                          உறங்கும் முன் சூடான பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும். மனதையும், உடலையும் டென்ஷன் ஆக வைத்துக் கொள்ளாமல் ரிலாக்சாக இபேருப்பதும், நல்ல தூக்கத்திற்கு வழி செய்யும்.
வெள்ளரிகாய், உருளைகிழக்கு, தக்காளி ஆகியவற்றை மெலிதாக கட் செய்து கண்களுக்கு மேல் வைக்கவும், இதனால் கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

                       வெள்ளை சாமந்திப் பூவின் இதழ்களைப் பிய்த்து அதை வெந்நீரில் போட்டு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு கருவளையங்களை போக்கும்.

                  கண்களை அழகாக வைத்திருக்க பால், பால்பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உண்பதோடு போதிய அளவு தண்ணீர் குடிக்கவேண்டியதும் மிக முக்கியம்.
பகல் நேரத்தில் உள்ளங்கைகளைக் குவித்து கண்களின் மேல் வைத்து மூடியபடி அடிக்கடி செய்யலாம். கண்களை வேகமாக மூடித் திறப்பது போலச் செய்வது, அதற்கு ஒருவித மசாஜ் மாதிரி அமையும்.
கண்களை இறுக மூடவும். பிறகு அகலமாகத் திறக்கவும். இதே போல 5 முறைகள் செய்யவும். புருவங்களைக் குறுக்காமல், கண் இமைகள் மட்டும் மூடி, மூடித் திறக்க வேண்டும். நெற்றி, முகத் தசைகள் சாதாரணமாக இருக்கட்டும். இந்தப் பயிற்சி கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கான அற்புதப் பயிற்சி. கருவளையங்களைப் போக்க இதைத் தொடர்ந்து செய்து வரலாம்.

              கருவளையம் ரொம்பவும் அதிகமிருந்தால் பியூட்டி பார்லர்களில் செய்யப்படுகிற ஐ மசாஜ் பலனளிக்கும்.

வீங்கின கண்கள்
                சிலருக்கு அடிக்கடி கண்கள் வீங்கின மாதிரி மாறும். இது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதற்கான அறிகுறி காலையில் தென்படுகிற வீக்கம். குளிர்ந்த மற்றும் சூடான தண்ணீரால் மாறி, மாறிக் கழுவுவதால் சரியாகும். கண்களைச் சுற்றியுள்ள தசைகளை லேசாக நீவிக் கொடுக்கலாம். வீக்கம் குறைகிற வரை கண்களுக்கான மசாஜ் செய்யக் கூடாது. அடிக்கடி இப்படி வீக்கம் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம்.

சிவந்து, கண்ணீர் வடியும் கண்கள்
                 கண்களுக்கு உபயோகிக்கிற மை, பிரஷ், ஐ லைனர், மஸ்காரா போன்ற ஏதேனும் அலர்ஜியானால் இப்படி கண்ணீர் வடியலாம்.
வாயில் துணியை வைத்து ஊதி கண்களின்மேல் வைக்கிற பழக்கத்தை தவிர்த்துக் கொள்ளவும். எச்சில் மூலம் தொற்றுக் கிருமிகள் கண்களுக்குள் போகும். கண்களைக் கழுவிவிட்டு அப்படியே காத்திருக்கலாம்.

                      அலர்ஜி காரணமாக சிவந்து, கண்ணீர் வடிதல் உண்டாகியிருந்தால் அதனை அலச்சியம் செய்யாது உடனடியாக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கண்களுக்கான மேக்கப் சாதனங்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.


கண்களுக்கான மேக்கப்பை நீக்க வேண்டியதன் அவசியம்:
இரவு படுப்பதற்கு முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றிலும் அகற்றப்பட வேண்டும்.
முதலில் செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை அகற்ற வேண்டும். ஐ மேக்கப் ரிமூவர் என்றே கிடைக்கிறது. அதில் பஞ்சைத் தொட்டு கண்களை மூடியபடி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கித் துடைக்க வேண்டும். இரண்டு, மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். பிறகு கண்களைத் திறந்து, வேறொரு பஞ்சால் கண்களின் உள் பக்கத்தையும், கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும். கண்ணில் உள்ள மேக்கப் முழுக்க அகற்றப் படாவிட்டால், அது எரிச்சலை உண்டாக்கி, கண்கள் சிவந்து போகுமாறு செய்யும்.
கண்களை பாதுகாக்க டிப்ஸ்:
சுத்தமான தண்ணீரால் அடிக்கடி கண்களைக் கழுவவும். ·சாதாரண மையில் ஆரம்பித்து, ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்காரா என எல்லாமே தரமான தயாரிப்புகளாக இருக்க வேண்டியது முக்கியம். ·
கம்பியூட்டர் முன் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி கண்களை சில நொடிகளாவது மூடி ஓய்வெடுக்க வேண்டும். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடிய பச்சை, நீல நிறங்களை அடிக்கடி சிறிது நேரம் பார்க்கலாம்.· கண்களைச் சுற்றி எப்போதும் மோதிர விரலால்தான். அதுவும் மிக மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்..
கண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்க.
இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதிலும் இந்த வேலையில் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதாக உள்ளது. இதனால் கண்கள் களைப்படைந்து, வறட்சி ஏற்பட்டு, சிவப்பு நிறமடைவது, எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுகிறது.
ஆகவே சிலர் கண்களுக்கு மருத்துகளை விட்டுக் கொள்கின்றனர். இவ்வாறு மருந்துகளை விட்டுக் கொண்டால், கண்களில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவை நீங்காமல் இருப்பதோடு, அவை கண்களில் வறட்சியை இன்னும் அதிகரித்துவிடும். எனவே இத்தகைய பிரச்சனை இருந்தால், அப்போது கண்களுக்கு மருந்துகளை விடாமல், ஒருசில இயற்கை முறைகளை பின்பற்ற வேண்டும்.
• கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலை தடுக்க சிறந்த வழியென்றால் அது குளிர்ந்த நீரால் கண்களை கழுவுவது தான். அதிலும் கம்ப்யூட்டர் மற்றும் டிவியை அதிக நேரம் பார்த்தால், கண்கள் சோர்வடைந்துவிடுவதோடு,  அதிலிருந்து வரும் கதிர்கள் கண்களில் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். .
• நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் முன்பு உட்கார்ந்திருந்தால், அவ்வப்போது கண்களுக்கு சிறிது இடைவேளை கொடுக்க வேண்டும். முக்கியமாக அந்த இடைவேளையின் போது கண்களுக்கான உடற்பயிற்சியை செய்வதால், கண்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம். அதிலும் கண்களை அங்கும் இங்கும் சுழற்றுவது மிகவும் சிறந்தது. வேண்டுமெனில் சிறிது நேரம் கண்களை சிமிட்டுவது, மூடிக் கொள்வது என்று செய்யலாம்.
• கண்களில் ஏதேனும் சோர்வு, எரிச்சல், வறட்சி போன்றவை ஏற்பட்டால், கண்ளை ரிலாக்ஸ் செய்வதற்கு சிறிது கண்களுக்கு குளிர்ச்சியானது தேவைப்படுகிறது. எனவே கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் வகையில் வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தால் கண்களில் வறட்சி நீங்கி, புத்துணர்ச்சியடையும்.
• கண்களின் வறட்சி மற்றும் அரிப்பை சரிசெய்ய ரோஸ் வாட்டரும் ஒரு சிறந்த பொருள். அதற்கு ரோஸ் வாட்டரை சிறிது கண்களில் விட வேண்டும். இதனால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, கண்கள் எப்போதும் வறட்சியின்றி இருக்கும்.
ஆரோக்கியமான கண்களே அழகான கண்கள். எனவே கண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். கண்கள் சிவந்துபோதல், மேக் அப் அலர்ஜியால் கண்கள் பாதிக்கப்படுதல், கொண்டாக்ட் லென்ஸ், சன்ஸ்கிரீன் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
கண்களை அலங்காரம் செய்தல்:
கண்களுக்கு தனி கவனம் செலுத்தி மேக் அப் போடுவதால் கண்களின் அழகு அதிகரிக்கும். முகத்திற்கும் தனி பொலிவு கிடைக்கும். கண்களுக்கு போடும் மேக்அப் சாதனங்களை சரியானதாக தேர்வு செய்யவேண்டும்.
கண்மை, ஐ லைனர், ஐ ஷேடோ போன்றவை தரம் வாய்ந்தவையாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அலர்ஜியினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.
கண்களுக்கு போடும் மேக் அப் கலர் சரியானதாக இருக்கவேண்டும். உங்களுடைய ஸ்கின் டோனுக்கு ஏற்ற சரியான கலரை தேர்ந்தெடுத்து போடவேண்டியது அவசியம்.
கண்களின் வடிவத்திற்கு ஏற்ப கவனம் செலுத்தி மேக் அப் போடவேண்டும். அப்பொழுதுதான் சரியான அளவில் அழகாய் மேக் அப் போடமுடியும். தரமான மேக் அப் கண்களுக்கு இரவில் திக்காகவும், பகல் நேரத்தில் லைட்டாகவும் மேக் அப் போடவேண்டும்.
அப்பொழுதுதான் இயற்கையான ஒரு லுக் கிடைக்கும். கண்கள் மென்மையானவை அவற்றிற்கு தனி கவனம் செலுத்தி மேக் அப் போடவேண்டும்.
லேட்டஸ்ட் மேக் அப் போடுவதன் இளமையாக, ஸ்டைலாக காணப்படுவீர்கள். முதலில் நல்ல தரமான பவுண்டேஷன் தடவ வேண்டும். பிறகு விருப்பமான நிறத்தில் ஐ ஷேடோ தடவ வேண்டும்.
காலை வேளைகளில் லைட்டான ஷேடுகளிலும் மாலை மற்றும் இரவு வேலைகளில் டார்க் நிறங்களையும் உபயோகிக்கலாம். பிறகு ஐ லைனர் தடவ வேண்டும். இப்போதெல்லாம் திக்காக ஐ லைனர் தடவுவதுதான் பேஷன்.
சிறிய கண்களாக இருந்தால் ரொம்பவும் திக்காகப் போட வேண்டாம். கீழ் பாகத்தில் முழுவதுமாக ஐ லைனர் தடவ வேண்டாம்.
பிறகு மஸ்காரா, காலை வேளைகளில் ஒரு கோட்டும் மாலை வேளைகளில் இரண்டு மூன்று கோட்டுகளும் தடவலாம். மஸ்காராவிலேயே இப்போது பிரவுன் நீலம் மாதிரி நிறங்கள் கூட வந்துவிட்டன. விருப்பமுள்ளோர் அவற்றையும் தடவிப் பார்க்கலாம்.
கடைசியாக காஜல் அதாவது கண் மை. இது கண்களுக்குள்ளே போகக் கூடியது என்பதால் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம்.
மேக் அப்பை கலைக்க: கண்களில் போடப்பட்ட மேக்கப்போடு இரவு தூங்கக் கூடாது. அதை அகற்றி விட்டே தூங்கச் செல்ல வேண்டும்.
கண்களின் மேக் அப் கலைக்கும் போது சோப், சோப் ஆயில் பயன்படுத்தவது கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே அதற்கென உள்ள கிளன்சர்ஸ் பயன்படுத்திதான் மேக் அப் கலைக்கவேண்டும்.
தினசரி இரவு தூங்கும் முன்பாகக் கண்களுக்குள் ஒரு துளி சுத்தமான விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டால் காலையில் கண்கள் பளிச்சென்று இருக்கும்.
சிறிய கண்களை அழகாக காட்ட
சின்னதாக இருக்கும் கண்களை பெரிதாக காட்ட த்ரெட்டிங் செய்யும்போது மேல் பக்க புருவத்தில் முடியை அகற்றாமல் கீழ் பக்கம் உள்ள புருவ முடிகளை மட்டும் எடுக்க வேண்டும். இப்படி செய்வதால் சிறிய கண்களை  உடையவர்களுக்கு பார்க்க அழகாக இருக்கும்.  
புருவத்தில் அதிக முடி இல்லாதவர்கள் கூட த்ரெட்டிங் செய்யும்போது, அந்த புருவத்திற்கு ஒரு ஷேப் கிடைத்து பார்க்க அழகாக இருக்கும். மேலும், வில் போன்ற ஷேப்பில் புருவம் இருந்தால் கண்கள் பார்க்க தனியாக தெரியும். ஐஷேடோ மற்ற நிறங்களில் போடாமல் பிரவுன் அல்லது ஸ்கின் கலர் உபயோகியுங்கள்.  
ஐலைனரும் பிரவுன் நிறத்தில் மேல்புற இமையில் உபயோகித்தால் கண்கள் எடுப்பாக, அழகாகவும் தெரியும். அதே சமயம் சிறிதாகவும் தெரியாது.
அடுத்து, சாதாரணமான மஸ்காரா உபயோகிக்காமல்  Volume Enhancer அல்லது Lash Fantasy   போன்ற மஸ்காரா உபயோகித்தால் கண் இமைகள் அழகாக தெரிவதுடன் கண்களும் எடுப்பாக தெரியும்.
Kohl  பென்சிலைக் கொண்டு கண்களின் கீழ் அழுத்தமாக மெலிதான ஒரே ஒரு லைன் மட்டும் போடுங்கள். இப்படி அழுத்தமான அதே சமயம் மெலிதான லைன் வேண்டுமென்றால்  Kohl pencil ஐ  ஒரு பேப்பரில் நன்றாக ஒரு முறை கிறுக்கிவிட்டு பிறகு உபயோகப்படுத்தினால் அழகாக வரும். அதிகமான அடர்த்தியில் Kohl பென்சிலைப் போட்டால் கண்கள் பளிச்சென்று தெரியாது. இன்னும் சிறிதாக தெரியும்.  
கொன்டாக்ட் லென்ஸ் பாவனை
கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, பார்வை குறைபாட்டை கண்டறிந்து கண்ணாடிகள் அணிந்தனர். பின்பு கான்டாக்ட் லென்சுகள் அணிந்தனர். இரண்டும் வேண்டாம் என்று கருதுகிறவர்கள் லேசர் சிகிச்சை பெற்றுக்கொள்கிறார்கள்.
இப்போது உச்சி முதல் பாதம் வரை அழகை விரும்பும் பெண்கள், உடைக்கு தக்கபடி கலர்கலரான காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்சுகளை பொருத்திக்கொள்கிறார்கள். அதில் டிஸ்போசபிள் லென்சுகளும் வரத் தொடங்கிவிட்டன.
அது தொடர்பான கேள்விகளும் - பதில்களும்:
கொன்டாக்ட் லென்ஸ் என்றால் என்ன?
பார்வை குறைபாட்டிற்காக கண்ணாடி அணிவது பலநூறு வருடங் களாக நடைமுறையில் உள்ளது. கண்ணாடிக்குப் பதிலாக கண்ணின் மேல்புறத்தில் பொருத்தப்படும் ஒரு மெல்லிய சாதனம் `கொன்டாக்ட் லென்ஸ்' எனப்படுகி றது. இந்த கொன்டாக்ட் லென்ஸ் ஒரு குறிப்பிட்ட வகை `பாலிமர் களை' பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதை எளிதாக கண்ணில் பொருத்தவும், அகற்றவும் இயலும்.
கண்ணாடிக்கும்- கொன்டாக்ட் லென்ஸ்க்கும் என்ன வித்தியாசம்?
கண்ணாடி அணிந்திருக்கும் ஒருவர், பார்வை குறைபாட்டிற்காக அதை அணிந்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். கண்ணாடி அணிவதால் சிலரது வெளித் தோற்றத்திலும், அழகிலும் மாற்றம் ஏற்படும். கண்ணாடி அணிவதை சிலர் அசவுகரியமாகவும் கருதுவார்கள். கண்ணாடியை மிக கவனமாக பாதுகாக்கவும் வேண்டும். இதனை அணிவதால் மூக்கின் மேல்பகுதியிலும், முகத்திலும் தழும்பும் உருவாகலாம்.
சிலர் முக்கியமான வேலைக்கு செல்லும்போது கண்ணாடியை மறந்து வீட்டிலே வைத்துவிட்டு சென்று, அவஸ்தைபடுவதும் உண்டு. கொன்டாக்ட் லென்ஸ் அணிந்து இருப்பதை மற்றவர்களால் எளிதாக கண்டறிய முடியாது. கொன்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள், கண்ணாடி அணியவேண்டியதில்லை. கொடாக்ட் லென்ஸ் அணிவதன் மூலம் மிக துல்லியமான பக்கவாட்டு பார்வையை பெறலாம்.
ஒருவர், மிக அதிகமான `பவர்' கொண்ட கண்ணாடி அணியும்போது கண்ணாடி மிக தடினமாகவும், பார்வை தெளிவு இல்லாமலும் இருக்கும். கொன்டாக்ட் லென்ஸ் அணிந்தால், பார்வை துல்லியமாகும்.
கொன்டாக்ட் லென்சில் எத்தனை வகைகள் உள்ளன?
கொன்டாக்ட் லென்சை பல்வேறு காரணங்களுக்காக நாம் உபயோகப்படுத்தலாம். பார்வைக்காக பயன்படுத்தப்படும் லென்ஸ்களில் மூன்று வகைகள் உள்ளன. அவை Rigid, semi soft, soft  எனப்படும். ஒவ்வொரு வகை கொன்டாக்ட் லென்சும், வெவ்வேறு வகை பாலிமரில் தயாரிக்கப்படுகிறது.
காஸ்மெட்டிக் கொன்டாக்ட் லென்ஸ் என்பது என்ன?
கண்களின் அழகை மேம்படுத்த காஸ்மெட்டிக் `கொன்டாக்ட் லென்ஸ்' பயன்படுகிறது. கண்களின் தோற்றத்தை சீரமைக்க பிராஸ்தெட்டிக் (prosthetic) கொன்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தலாம். காஸ்மெட்டிக் கொன்டாக்ட் லென்சுகள் பல நிறங்களில் கிடைக்கின்றன. உடைக்கு தகுந்த நிறத்துக்கு ஏற்றபடி அவைகளை தேர்வு செய்யலாம்.
கொன்டாக்ட் லென்சை எவ்வளவு நேரம் தொடர்ச்சியாக கண்களில் வைத்திருக்கலாம்?
பொதுவாக கொன்டாக்ட் லென்ஸ்கள் கண்ணில் பொருத்திய சில மணி நேரத்தில் அகற்றப்பட வேண்டும். மீண்டும் மறுநாள் பொருத்திக் கொள்ளலாம். பொதுவாக இவைகளை 8 முதல் 10 மணிநேரம் வரை கண்களில் வைத்திருக்கலாம்.
தற்போதைய புதிய வரவான `Extended wear' என்ற கொன்டாக்ட் லென்சை 14 முதல் 16 மணிநேரம் வரை கண்களில் பொருத்திக்கொள்ளலாம். தற்போது தினமும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய `Daily disposable' லென்ஸ்களும், ஒரு வாரம் மட்டும் பயன்படுத்துவ தற்கானவைகளும், ஒரு மாதம் மட்டும் பயன்படுத்தக்கூடியவைகளும் உள்ளன.
கொன்டாக்ட் லென்ஸ்களை பாதுகாப்பது எப்படி?
கான்டாக்ட் லென்ஸ்களை தினமும் பிரத்யேகமான திரவத்தில் கழுவிய பிறகே கண்ணில் பொருத்த வேண்டும். சுத்தமாக பயன்படுத்த வேண்டும். அணிந்துகொண்டு கண்களை கசக்கக்கூடாது. பயன்பாடு முடிந்ததும் கழற்றி பாதுகாக்கவேண்டும். இதனை அணிந்து கொண்டே தூங்கக்கூடாது. இவைகளை பாதுகாப்பதும், பராமரிப்பதும் எளிது.
கொன்டாக்ட் லென்ஸ்களால் பக்கவிளைவுகள்?
அவற்றை நாம் பார்வை மற்றும் அழகுக்காக பொருத்திக்கொள்கிறோம். அதனால் எந்த பாதிப்போ, பக்கவிளைவுகளோ இல்லை.
கொன்டாக்ட் லென்ஸ் எந்த வயதில் இருந்து அணியலாம்?
12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொன்டாக்ட் லென்ஸ் அணியலாம். ஆனால் லேசர் சிகிச்சை 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டும்.
லேசர் சிகிச்சையால் என்ன பலன்?
18 வயதுக்கு மேற்பட்டவருக்கு கண்ணில் பவர் (கண்ணாடியின் அளவுகோல்) மாறுவதில்லை. எனவே 18 வயதுக்கு மேல் `லேசிக்' செய்து கொண்டால் கண்களில் உள்ள பார்வைக் குறைவை முழுமையாக சரி செய்ய இயலும்.
லேசிக் செய்த பின்பு கண்ணாடி மற்றும் கொன்டாக்ட் லென்ஸ் அணிய தேவையில்லை. `லேசிக்' பார்வைக் குறைபாட்டை நிரத்தரமாக சரிசெய்யும். தற்போது லேசிக் சிகிச்சை முறையில் மேலும் ஒரு வளர்ச்சியாக இன்ட்ரா லேசிக் (intra lasik) முறை உள்ளது.
இதில் அனைத்து சிகிச்சைகளையும் மிக நுண்ணிய லேசர் கதிர்கள் மூலமாக செய்யப் படுகிறது. அமெரிக்காவில் இந்த சிகிச்சைக்கு உள்படுகிறவர்கள் ராணுவம் மற்றும் விமான போக்குவரத்திலும் பணிபுரியலாம். இந்தியாவிலும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
கண்களை பாதுகாக்கும் உணவுகள்:
பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிக முக்கியம். அதனால் தான் மருத்துவர்கள் உணவில் அதிக அளவில் பச்சை காய்கறிகளை 
சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும்  காய்கறிகளை சாப்பிடவேண்டும்
பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன.  இவை கண்களுக்கு மிகவும் நல்லது. தினமும் எதாவது ஒரு கீரை வகை சேர்ப்பது உடல் நலத்துக்கு ஏற்றது.
குறைந்த பட்சம் வராத்திற்கு இரண்டு தடையாவது கிரை சேர்க்க வேண்டும். அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, 
அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி௧2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை  அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை கண் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது. வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும்  இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது.
கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து  பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய்.
காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில்  மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது.
கறிவேப்பிலை, கேரட் கண்களை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றுகிறது  இவை இரண்டும் கண்களின் காவலனாக விளங்குகிறது. தக்காளி,  பசலை, லிவர்,  முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது. உடலில் அதிகமாக சுரக்கும்  குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன.
இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை,
உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.
முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்
கிட்டப் பார்வை,  தூரப் பார்வை, பார்வை மந்தம், கண்ணில் சதை வளர்தல், கண்ணில் பூவிழுதல், கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்களாகத் தெரிதல், கண்ணில் நீர்வடிதல், மாலைக்கண், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை, கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால், அதன் மூலமாக வரும் தலைவலி, தொற்று நோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய், மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய், கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை, வெள்ளெழுத்து என்னும் கண்பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
கண்ணில் நோய் வரக் காரணமென்ன?
முதலில் கூறியது போல ஆரோக்கியம் இல்லாமல் குழந்தைகளைப் பெறும் பெற்றோர் ஒரு காரணம். சத்துக் குறைவான உணவுகளை சாப்பிடுவதாலும் வரலாம். கல்லீரல் பாதிக்கப்பட்டாலும் கண்நோய்கள் வரும். பார்வை நரம்பில் ஏற்படும் இரத்தக்குறைவு, இரத்த ஓட்டம் தடைபடுதல், இரத்த அழுத்தம் குறைவு காரணமாகவும் கண்கோளாறுகள் வரலாம். பரம்பரைக் காரணமாகவும் கண் கோளாறுகள் வரலாம். தொற்று நோய்க் கிருமிகள், காற்றில் வருகின்ற கிருமிகள், தூசி, தீ போன்றவற்றாலும் கண் நோய்கள் வரலாம்.
சத்துக் குறைவால் வரும் கண் நோய்கள் நீங்க...
சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்து சாறு பிழியவும், கொத்தமல்லி இலைச்சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட் சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண்டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில்லி) தண்ணீர் கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை / மாலை இருவேளை காபி, டீக்கு பதிலாக தினமும் குடித்து வரலாம். (இதை தினமும் புதிதாக செய்ய வேண்டும்)
பப்பாளிப் பழம் 4 துண்டு,  தேங்காய்ப் பால் அல்லது பசும்பால் 1 டம்ளர் (200 மில்லி) தேவையான அளவு பனங்கற்கண்டு, ஏலக்காய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம்.
புதிய பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 1 ஸ்பூன் தேன் இவற்றை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு இருவேளை சாப்பிடலாம்.
கண்பார்வை தெளிவடைய...
பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.
அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும்.
பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதனால்  கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டு வரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவுகள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.
தூக்கம்:
தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்சனையாகவே உள்ளது. சரியான தூக்கம் இல்லாமல் இருந்தால் ஒருவரது வாழ்க்கையில் கண்கள் பாதிப்பு ஏற்படக்கூடும்.
கார்னியா குறைபாடு: கண்ணின் முக்கிய உறுப்பாக விளங்கும் கார்னியா (விழி வெண் படலம்) பாதிக்கப்பட்டால், ஒளிக் கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப் படுகிறது. விழித்திரையில் பிம்பம் படிவதில்லை.
எனவே பார்வை தெரிவதில்லை. தொற்றுநோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு, கண் சிகிச்சை குறைபாடு காரணமாக சிலருக்கு பிறவியிலேயோ அல்லது பரம்பரையாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது. கார்னியாவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விட்டு, அங்கே தானமாக கிடைத்த கண்ணின் கார்னியா பகுதியை வைத்து மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது.
ஒவ்வொருவரும் இவ்வுலகை காண உதவுபவை கண்கள். சில காரணங்களால்(பிறவியிலோ அல்லது விபத்தின் மூலமாகவோ) நாட்டில் லட்சகணக்கானோர் பார்வையின்றி, உலகை காண முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் நிச்சயம் மீண்டும் கண்பார்வை பெற முடியும்.
அதற்கு ஒரே வழி கண்தானம். இது முற்றிலும் ஒரு சிறந்த கொடை.
நாம் மறைந்த பிறகும் இவ்வுலகைக் காண வேண்டுமா.. கண்தானம் செய்யுங்கள். கண்தானம் செய்வது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தவும், கண்தானம் செய்பவர்களை பாராட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் செப்., 8ம் தேதி தேசிய கண்தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஏன் கண்தானம்: நாம் இறந்து விட்டாலும் உயிருடன் இருப்பது நமது கண்கள். கண்தானம் செய்வதன் மூலம் பார்வையற்ற இருவருடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றலாம். மேலும் கண்தானம் செய்வது புனிதமான செயல்.இந்தியாவில் தற்போது 1 கோடியே 50 லட்சம் பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இதில் 68 லட்சம் பேர் "கார்னியா' குறை பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் கோடியே 6 லட்சம் பேராக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நம்முடைய உடலில் மூளைக்கு அடுத்து மிக சிக்கலான உறுப்பாக கருதப்படுவது கண்கள்தான்.
கண்கள் தன்னுள்ளே 2 மில்லியன் வேலைப் பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 36,000 தகவல்களை பரிமாற்றும் ஆற்றல் நம் கண்களுக்கு உண்டு. பார்வைக் குறைபாடு இல்லாத ஒருவரால் 14 மைல்களுக்கு அப்பாலுள்ள மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை கண்டுகொள்ள முடியுமாம்.
மனிதனுக்கு கிடைக்கக்கூடியமொத்த அறிவில் கண்களின் பங்களிப்பு மட்டும் 85வீதம். ஆனால் இரவு பகல் என்றில்லாமல் எந்தவொரு நொடியிலும் முழுமையாக செயல்படும் கண்களுக்கு ஓய்வே கிடையாதாம்.
நமது உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த உலகத்தை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள, பார்க்க, தெரிந்துகொள்ள நமது இருவிழிகள் தான் முக்கிய காரணமாகின்றன. இன்றைய அவசர உலகில் தற்போதுள்ள இளைஞர் சமுதாயம் எப்படி இருக்கின்றது?
10 வயது தாண்டுவதற்கு முன்பே கண்பார்வைக் கோளாறுகள் வருகின்றன. இதற்குக் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் தாய் _தந்தையரே முதற்காரணம். அடுத்து சத்துக் குறைவான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவது, கண் கோளாறு வரத்துவங்கி விட்டால் அதை உடனே தகுந்த மருத்துவரை நாடாமல் அலட்சியமாக விட்டுவிடுவது, அதிக நாட்களுக்குத் தொடர்ந்து கண் சம்பந்தமான நோய்களை கவனிக்காமல் இருந்துவிட்டு நோய் முற்றிய உடன் கடைசியாக மருத்துவரை நாடுவது இப்படி பல்வேறு காரணங்களினால் கண்சம்பந்தமாக பல வகையான நோய்கள் வருகின்றன.
கண்ணனியில் கவனமா????தேவை கண் கவனம்!!
ஒரு நாளைக்கு தொடர்ந்து எட்டுமணி நேரம் கணினியைப் பார்க்கும் வகையில் நம் கண்கள், பரிணாம வளர்ச்சியில், படைக்கப்பட்டிருக்கவில்லை.
சிலருக்கு தூரத்தில் இருக்கும் எழுத்துக்கள் தெளிவாக தெரியும். ஆனால், புத்தகத்தை எடுத்தால் அவற்றில் உள்ள எழுத்துக்கள் மங்கலாக தெரியும். வேறு சிலரோ புத்தகங்களை, மூக்குக்கண்ணாடியின் உதவியின்றி அநாயாசமாகப் படிப்பார்கள். ஆனால், தூரத்தில் பேருந்து வரும்போது "அது என்ன பஸ்? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க" என்று பக்கத்தில் நிற்பவரிடம் கேட்டுத் தெளிவு பெறவேண்டிய கட்டாயம்.
இப்படித்தான் கணினி தொடர்பான கண்கள் குறைபாடுகளும். ஆனால் அவை கொஞ்சம் வேறுபட்டவை.
பொதுவாக கணினித் திரையை நீண்ட நேரம் பார்ப்பதால் கண்பார்வை பாதிக்கப்படுவதில்லை. ஆனால் கண்களுக்குக் களைப்பு ஏற்படுகிறது.
சிலருக்கு கணினியைத் தொடர்ந்து பார்ப்பதால் கண்கள் ஈரத்தன்மையை இழந்து உலர்ந்து விடுகின்றன. இதற்கும் நேரடியான காரணம் கணினி அல்ல. தொடர்ந்து கணினித் திரையை பார்க்கும்போது, நாம் வழக்கமான வேகத்தில் கண்களை சிமிட்ட மறந்துவிடுகிறோம். இதன் காரணமாகத்தான் ஏற்கெனவே கொஞ்சம் உலர்ந்த கண்கள் கொண்டவர்களுக்கு அந்த சிக்கல் பெரிதாகிறது.
இதற்காக சில சொட்டு மருந்துகள் விற்கின்றன. மருத்துவரின் ஆலோசனையையும் கேட்டுக்கொண்டு இவற்றை பயன்படுத்தலாம்.
சிலர் மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பார்கள். இவர்களால் புத்தகத்தையும் எளிதில் படிக்க முடியும். தூரத்தில் உள்ள எழுத்துக்களையும் நன்கு வாசிக்க முடியும். ஆனால் கணினித் திரையில் மின்னும் எழுத்துக்கள் மட்டும் இவர்களுக்குத் தெளிவாகத் தெரியாது. இதற்கென்றே (இந்த அளவு தூரத்தைத் துல்லியமாக பார்ப்பதற்கென்றே) தனி பவர் கொண்ட கண்ணாடிகளை கண் மருத்துவர் பரிந்துரைப்பார். அதை வாங்கி அணிந்து கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடும்.
பொதுவாக கணினியைப் பயன்படுத்துபவர்கள் கீழே உள்ள ஆலோசனைகளைக் கடைப்பிடித்தால் கண்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கலாம்.
* கணினியின் முன் உட்கார்ந்திருக்கும்போது அடிக்கடி கண்களை சிமிட்டுங்கள்.
* கணினித் திரை உங்களிடமிருந்து சுமார் ஒன்றிலிருந்து ஒன்றரை அடிவரை தள்ளியே இருக்கட்டும்.
* திரையை (மானிட்டரை) உங்கள் பக்கமாக 15 டிகிரி கோணத்தில் சாய்த்துக் கொள்ளுங்கள். திரையின் மேல் பகுதி உங்கள் பார்வைமட்டத்துக்கு நேராக இருக்கட்டும்.
* தொடர்ந்து இருபது நிமிடங்களுக்குக் கணினியைப் பயன்படுத்தினால் நடுவே இரண்டு நிமிடங்களுக்காவது பார்வையை வேறு எங்காவது செலுத்துங்கள்.
கணினியின் பயன்களும், அவற்றை பயன்படுத்தும் நேரமும் அதிகமாகிக் கொண்டே போகும் காலம் இது. எனவே, மேற்கூறிய ஆலோசனைகளை மனதில் கொண்டு உங்கள் கண்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

அழகு குறிப்புகள்:பெண்களின் இளமை கண்களில் தெரியும்!
பெண்களின் அழகைக் குறிப்பிடும்போது கவிஞர்கள் அவளின் கண்களைப்பற்றி கூறத் தவறுவதில்லை. கயல்விழி என்றும், காந்தக் கண் என்றும்,  
கண்களில் இருந்தே ஒரு பெண் எவ்வளவு இளமையானவள், எவ்வளவு இனிமையானவள் என்பதை மட்டுமன்றி  சொல்லி விடலாம்.
அத்தகைய அற்புதமான கண்கள் சரியான முறையில் பேணப்படாமல் போகின்ற போது நேருகின்ற கேடுகள் அநேகம். கண்கள் கவனிக்கப்படாமல் விடப்படுகின்ற போது கண்களைச் சுற்றிலும் சுருக்கங்களும், கருவளையங்களும் உருவாகி கண்களை ஒளிகுன்றச் செய்து காலத்திற்கு முந்தியே கண்களுக்குச் சோர்வையும், களைப்பையும் உண்டு பண்ணி மூப்படைந்த தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
சத்துமிக்க, ஆரோக்கியமான உணவு, போதிய உடற்பயிற்சி, மிதமான நிம்மதியான உறக்கம் இவைகளைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் கண்பாதிப்புகளை ஓரளவு தவிர்க்கலாம்.
அத்தோடு, வாரம் ஒரு முறை கண்களுக்கான மாஸ்க்கினைக் கொண்டு சுமார் 15 நிமிடங்கள் கண்களில் வைத்துப் பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி வரப் புத்துணர்வைப் பெற்றிடலாம். கண்களை மூடி மூச்சை நன்றாக ஐந்தாறு முறை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும்.
இவ்வாறு செய்தால் கண்களுக்குச் செல்லும் ரத்தம் மிகுதியாகிறது. முகத்தில் ஏற்பட்டிருக்கும் இறுக்கம் தளர்வுறும் வரையில் மறுபடி மறுபடி மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். நெற்றி, கன்னம் மற்றும் தாடை போன்ற பகுதிகளுக்கும் கண்களுக்குச் செலுத்தப்படும் அதே அளவு அக்கறையையும், பாதுகாப்பினையும் கொடுக்கப் பெறக்  வேண்டும்.
* ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை பளீர் என்று பிரகாசிக்கச் செய்ய ஒரு பஞ்சு உருண்டையை பன்னீரில் நனைத்து மூடிய கண்களின் இமைகள் மீது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
* கண்களை மசாஜ் செய்வதற்கு உங்கள் மோதிர விரலையே உபயோகியுங்கள். அதுதான் கண்களைச் சுற்றியுள்ள மெல்லிய சருமத்திற்கு அதிகப்படியான அழுத்தத்தைத் தராது.
* டி.வி. பார்க்கும் போது உங்கள் கண்களுக்கும் டி.வி. பெட்டிக்கும் குறைந்தபட்சம் 7 அடிதூரம் இடைவெளி இருப்பது உங்கள் கண்களுக்கு நல்லது. இல்லாவிடில் கண்பார்வை பாதிக்கப்படும்.
* படிக்கும் போது உங்கள் கண்களுக்கும், புத்தகத்துக்கும் இடையில் குறைந்தபட்சம் இரண்டடி இடைவெளி இருக்க வேண்டியது உங்கள் கண்களின் பாதுகாப்புக்கு அத்தியாவசியமானது.
* உஷ்ணத்தால் எரியும் கண்களைக் குளிரவைக்க ஐஸ்வாட்டரில் நனைத்த பஞ்சு அல்லது கைக்குட்டையை உங்கள் மூடிய கண்கள் மீது 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
* ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை புத்துணர்வு பெறச்செய்ய, சிறிது உப்பு கரைத்த நீர் நிறைந்த கிண்ணத்தை கண்ணோடு ஒட்டி வைத்து இந்தக் கரைசலுக்குள் விழியை முக்கி கண்களைத் திறந்து, கண் விழியை இடமும், வலமும், மேலும் கீழுமாக உருட்டவும். இது கண்களில் உள்ள அழுக்கு, தூசு ஆகியவற்றை அகற்றி விடும்.
* கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்க தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்கவும். உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவும். படுக்கும் முன் தினமும் வைட்டமின்ணி எண்ணெயை கண்ணைச் சுற்றி மசாஜ் செய்யவும். மலச்சிக்கலைத் தவிர்க்கவும்.
* கண்களுக்குக் கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க, தினமும் உருளைக் கிழங்கைத் துருவி சாறு எடுத்துப் பூசிக் காயவிட்ட பின் கழுவவும்.
* பாதாம் பருப்பை ஊறவைத்து பால்விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் குறையும்.

கருவளையங்களை தவிர்க்கும் வழி:
கண்ணின் கீழ் ஏற்படும் கருவளையங்களுக்கு, ரெட்டீன் - A (Retin - A) எனப்படும் ரெட்டினாயிக் அமிலம் கொண்ட புதிய மருந்து நல்ல பலன் தருகிறது. இது சூரிய ஒளியால் உண்டாகும் பாதிப்பை நீக்கி, சருமத்தின் மேற்புறமுள்ள பகுதிகளுக்கு இரத்தவோட்டத்தையும் அதிகரிக்கின்றது.
தினசரி இரவு தூங்கச் செல்லும் முன் கண்களுக்கு கீழ்புறம் சிறிதளவு ரெட்டீன் -ஏ க்ரீம் தடவி வந்தால் போதும். க்ரீமின் அளவு அதிகமானால் முகத்தில் வீக்கத்தினையும், வறட்சியையும் ஏற்படுத்தக்கூடிய பண்பு இதற்கு உள்ளது.
கூடிய வரைக்கும் வெயிலில் செல்லும் போது சருமத்தைப் பாதுகாக்கக் கூடிய (Sunscreen Ointment) க்ரீம்களைப் பயன்படுத்த வேண்டும். ரெட்டீன் -ஏ ஒரு சில மாதங்கள் சென்ற பின்னரே நல்ல பலனளிக்கிறது.
உங்கள் கண்கள் பெரிய இமைகளைக் கொண்டிருப்பின்...
கண் இமைகளை சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷேடோக்களை இடவும்.
பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள்.
கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.
சிறிய கண்களைக் கொண்டவர்கள்..
நன்கு அழுத்தமான வர்ண ஐ ஷேடோவைக் கொண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள்.
இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள். சிறிய கண்களும் தற்போது எடுப்பாகத் தோன்றும்.
உள்நோக்கி இருக்கும் கண்களுக்கு...
கண்கள் மீது ஐ ஷேடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு, இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும். இது உங்கள் கண்களை அழகாக்கும்.

கொலாஜென் சிகிச்சை (Collagen Treatment):
சருமத்தை வழு வழுவென்று வைக்கக் கூடிய பண்பு கொலாஜென்னிற்கு உண்டு. இயற்கையில் கிடைக்கக் கூடிய இப்புரதமானது எல்லா உடல் திசுக்களிலும் காணப்படுகிறது. இச் சிகிச்சையில் கொலாஜென் ஊசி மூலமாக சுருக்கங்கள் தோன்றியுள்ள பகுதிகளில் செலுத்தப்பட்டு குழிவு ஏற்பட்டுள்ள இடங்களில் வைத்து நிரப்பப்படுகிறது.
இச்சிகிச்சைக்கான செலவு சிறிது அதிகமானாலும், அடிக்கடி தேவைப்படுவதில்லை. குறுகிய கால சிகிச்சையே நல்ல பலனைத் தருகிறது.
வேதிச் சிகிச்சை:
வயதாக ஆக, கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மெல்லிய கோடுகள் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட இடங்களின் மேற்புறங்களில் ரெட்டினாயிக் அமிலக் கரைசலைத் தடவி வர கண்களைச் சுற்றிலும் ஏற்படும் கருவளையங்கள் காய்ந்து புண்கள் உரிவதைப் போன்று உதிர்ந்து விடுகின்றன. அப்பகுதியை நன்று ஆறியவுடன் பார்த்தால் மென்மையாகவும், வெண்மையாகவும் இருக்கும்.
வெயிலிலிருந்து பாதுகாப்பு:
சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வயலெட் கதிரினால் சருமம் எளிதாக பாதிக்கப்பட்டு விடுகிறது. அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றிலும் உள்ள பகுதி மிகுதியான தாக்குதலுக்கு ஆட்படுகிறது. சருமத்தின் வெளிப்புறம், சூரிய ஒளியினால் அதிகமாக பாதிக்கப்பட்டால் சில நேரங்களில் தோல் புற்றினைக் (Skin Cancer)கூட ஏற்படுத்துகிறது. சூரிய ஒளி கண்களின் கீழேயுள்ள தசைகளில் இறுக்கத்தையும் கருமையையும் படரச் செய்கிறது.
இம்மாதிரியான பின் விளைவுகளையும், காட்ராக்ட், கருவளையம் போன்ற சீர் கேடுகளையும் தவிர்த்து விட, நல்ல தரமான குளுமைக்கண்ணாடி (Cooling Glasses)களை அணிந்து கொள்ளலாம். கண்களில் வெளிச்சம் படாதவாறு பாதுகாக்கக் கூடிய வகையில் குடை மற்றும் கிரிக்கெட் குல்லா போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
தொங்கு சதைக்கு அறுவை சிகிச்சை:
கண்களுக்குக் கீழே உள்ள பகுதி மிக மிருதுவாகவும் லேசாகவும் இருப்பதால் வெகு விரைவில் அழற்சிக்கு ஆட்பட்டு விடுகின்றது. சத்தற்ற உணவும், வேலைப்பளு மற்றும் மன இறுக்கம் போன்றவை இவ்வழற்சியை மேலும் தீவிரமாக்குகிறது. சில பெண்களுக்கு மரபியல் தன்மை காரணமாகவும் இந்நிலை ஏற்படச் சாத்தியமுள்ளது. வயதாகும் பொழுது, இத்தகைய தொங்கு தசைகள் முகத்தில் பெருங் குறையை உண்டாக்கி, தோற்றத்தையே சிதைத்து விடுகின்றன.
இவ்வாறாக ஏற்படும் கொழுப்பு சதையை பிளிபிரோம் பிளாஸ்டி (Blepheroplasty) எனப்படும் கண் அறுவை சிகிச்சை மூலம் உறிஞ்சி வெளியே எடுத்து சீர் செய்து விடலாம். ப்ரோ லிப்ட் (Brow Lift) என்னும் முறைப்படி ஒழுங்கற்று இருக்கும் புருவங்களை அழகாகத் தீட்டி கண்களை இளமையோடும் புதுப் பொலிவுடனும் இருக்கச் செய்யலாம். பிளாஸ்டிக் சர்ஜரி (Plastic Surgery) செய்து வரும் மருத்துவர்களின் உதவியால் இக் குறைபாட்டை அகற்றிடலாம்.
நன்றி