Pages

முத்திரைகள்


கோடை வெப்பத்தை சமாளிக்க முத்திரைகள்..!
கோடை காலம் தொடங்கிவிட்டது.
அதிக வெப்பம், தாகம் என்று பிரச்னைகள் தாக்கும். இச்சூழ்நிலையில், நம் உடலைப் பாதுகாத்துக்கொள்ள முத்திரைகள் உதவும்.
கோடை வெயிலை சமாளிக்க உதவும் முக்கிய முத்திரைகள் நான்கை பார்க்கலாம்.
1. நீர் முத்திரை..!

சுமார் 10 முதல் 20 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு 5 (ஐந்து) முறை செய்யலாம்.
அமர்ந்தோ, நடந்தோ, பயணத்தின்போதோ எந்த நிலையிலும் செய்யலாம்.
பலன்கள்..!
நாவறட்சி
தொண்டை வறட்சி
தாகம்
தண்ணீர் குடித்தும் தாகம் தீராத பிரச்னை
கூந்தல் வறட்சி
வெயிலால் ஏற்படும் சருமத் தொல்லைகள்
சருமம் கருத்துப் போதல்
அரிப்பு
வியர்க்குரு
நீர்க் கடுப்பு
வெள்ளைப்படுதல்
உடற்சூட்டால் ஏற்படும் வயிற்றுவலி சரியாகும்.
வெயிலில் விளையாடுவோர், நடப்போர் இந்த முத்திரையைச் செய்துவருவது நல்லது.
2. வியான முத்திரை:
தினம் சுமார் 10 நிமிடங்கள் வரை, ஒரு நாளைக்கு 3 முறை செய்யலாம்.

காலை, மாலையில் சப்பளாங்கால் இட்டோ, நாற்காலியில் பாதங்கள் தரையில் படியும்படி அமர்ந்தோ செய்ய வேண்டும்.
பலன்கள்
சோர்வு
வியர்வை, வெயில் சூட்டால்  ஏற்படும் வயிற்றுப்போக்கு, அதீதத் தூக்க உணர்வு, வயிற்றுக்கடுப்பு, தலைசுற்றல், மயக்கம், வெயிலால் ஏற்படும் பக்கவாதம், வயதானோர் வெயிலைச் சமாளிக்க முடியாமல் போவது, படபடப்பு, ரத்தக்கொதிப்பு, தலைபாரம், தலையில் நீர்க்கோத்தல் சரியாகும்.
லபதி முத்திரை: 10 நிமிடங்கள் வரை
மாலை மற்றும் இரவு என இரண்டு முறை, அமர்ந்தோ, படுத்த நிலையிலோ செய்ய வேண்டும்.
பலன்கள்: கண் சிவந்துபோதல், கண் எரிச்சல், வெப்பமான மூச்சுக்காற்று, உதடு, நாக்கு, தொண்டை, வாயின் உட்பகுதியில் எரிச்சல், புண்கள், கொப்பளங்கள் வராமல் தடுக்கப்படும்.
அபான முத்திரை: 20 நிமிடங்கள் வரை
இரவில் மட்டும் நிமிர்ந்து உட்கார்ந்து செய்ய வேண்டும்.
பலன்கள்: அபான முத்திரையால் உள்ளங்கை வியர்வை, மூலம், மூலச்சூடு, கடுப்பு, ரத்த மூலம் வராமல் தடுக்கலாம். வெயில் காலத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம் குறையும். சிறிய கல் அடைப்புகள் நீங்கும்.


லிங்க முத்திரை

இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று கோத்துக்கொள்ள வேண்டும். ஒரு கை கட்டை விரலை மட்டும் உயர்த்திக்கொள்ள வேண்டும்.
பெண்: வலது கை மேற்புறமாக இருக்குமாறு கோத்து, இடது கை கட்டை விரலை உயர்த்த வேண்டும்.
ஆண்: இடது கை மேல்புறமாக இருக்குமாறு கோத்து, வலது கட்டை விரலை உயர்த்த வேண்டும்.
பலன்கள்: அதிகமான சளி, நெஞ்சுச் சளி வெளியே வர, லிங்க முத்திரை உதவும். சளித் தொந்தரவு இருக்கும்போதும், குளிர் காலத்திலும் செய்யலாம். இந்த முத்திரையை 5-10 நிமிடங்கள் செய்ய, பாதிப்பு நீங்கும்.

No comments:

Post a Comment