Pages

ஆண்களுக்கு வலிமை தரும் ஜின்செங் வேர்தைலம்

Ginseng Roots

 

              சீனாவின் தாவர மருந்துகளில் மிகப்பிரபலமானது ஜின்செங். இது வடகிழக்கு, சீனா, கிழக்கு ரஷியா, வடகொரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த்து. 7000 ஆயிரம் ஆண்டுகளாக இதனுடைய மருத்துவப் பயன்கள் தொடர்ந்து உணரப்பட்டுள்ளது. இதனை அரேபியர்கள் 9- ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார். இருப்பினும் கி.பி 18-ம் நூற்றாண்டுக்குப்பிறகே ஜின்செங் பிரபலம் அடைந்தது. இத்தாவரத்தின் வேர் மருத்துவப்பயன் கொண்டவை.

        பயிரிடப்பட்ட தாவரங்களில் இருந்தே வேர்கள் பெறப்படுகின்றன. பயிரிடப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்தே வேர்கள் பலன் தரத் தொடங்கும். இலையுதிர்காலத்தில் சேகரிக்கப்படும் வேர்கள் ஆவியில் வேகவைத்து உலர்த்தப்படும். செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் பலவிதமான வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜின்செங் வேரில் 3 சதவிகிதம் ஜின்செனாய்டுகள் உள்ளன. இவை 25 வகைகளாக பிரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இவை டிடெர்பினாய்டு சப்போனின்களாகும். இவற்றுடன் அசிட்டிலைன், கூட்டுப்பொருட்கள், செஸ்கியூடெர்பின்கள்,பெனாக்சன்கள், உள்ளன. மனஅழுத்தம் போக்கும் சீனா, ஜப்பான்,கொரியா மற்றும் ருஷ்யாவில் கடந்த 30 ஆண்டுகால ஆய்வுகள் ஜின்செங் வேரினை சிறந்த வலுவேற்றியாக நிரூபித்துள்ளன. நமது உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களில் இருந்து ஜின்செங் காப்பாற்றுகிறது. வேலைப்பளுவினால் ஏற்படும் அழுத்தங்கள்,சோர்வு மற்றும் சளித் தொல்லைகளுக்கு எதிராக இது
  செயல்படுகிறது. பசியினால் ஏற்படும் களைப்பு வெப்ப நிலைகளில் உயர்-குறை மட்டங்கள், மற்றும் மனம், உணர்வு இறுக்கங்களை தாங்க உடலினை ஏற்றதாகச் செய்யும். இவை மட்டுமின்றி தூக்கத்தை தூண்டி நன்றாக உறக்கம் வரச்செய்யும். நம் உடலில் இயல்பாக உள்ள ஹார்மோன்கள் போன்ற அமைப்புடைய ஜின்செனாய்டுகள் இதற்கு அடிப்படையாக உள்ளன. ஜின்ஜெங் நோய் எதிர்ப்பு சக்தியினை மேம்படுத்தி கல்லீரல் செயல்பாட்டினை கூட்டுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வயோதிகத்தால் ஏற்பட்ட பலவீனம் போக்கவல்லது. பாலுணர்வு தூண்டும் சீனாவில் ஓட்டப்பந்தைய வீரர்களுக்கு வலுவேற்றியாகவும், ஊக்குவியாகவும் ஜின்செங் பயன்படுகிறது. உடல்சார்ந்த இறுக்கத்தினைப் போக்க வல்லது. ஆண்களுக்கு பால் உணர்வு ஊக்குவியாகவும், பயன்படுத்தப்படுகிறது. வடக்கு மற்றும் மைய சீனாவில் உள்ள மத்திய வயதினர்கள் இதனை வலுவேற்றியாக உட்கொள்கின்றனர். குளிரை தாங்க உதவுகிறது. மேலை நாடுகளில் வலுவேற்றியாகவும், மன இறுக்கங்களைத் தாங்கவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தேர்வு எழுதும் பொழுது ஏற்படும் இறுக்கங்களை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது. ஜின்செங் மாத்திரைகளாகவும், சூப் கலவையாகவும் உட்கொள்ளப்படுகிறது. இவை ஆண்மலடு மற்றும் விந்து விரைவில் வெளியேறுதல், நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை, தற்காலிக மன இறுக்கம் ஆகியவற்றினை போக்கவும் உடலின் உயிர்சக்தியை பராமரிக்கவும் பயன்படுகின்றன.


                          Web           : https://noyatravaalvu.blogspot.in/
                          Youtube     : https://www.youtube.com/channel/UCOcyVqUvDnF66lfMD47L42w
                          Facebook  : https://www.facebook.com/1625788667732714
                          Google+    : https://plus.google.com//113468192738856595726/

No comments:

Post a Comment